காதல் மனைவியை ஆஜர்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் வழக்கில் போலீசாருக்கு உத்தரவு
1/26/2021 3:08:45 AM
மதுரை, ஜன. 26: காதல் மனைவியை ஆஜர்படுத்தக் கோரிய வழக்கில் போலீசார் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், பெருமகளூரைச் சேர்ந்த சுரேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சிங்கப்பூர் நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். 2018 முதல் நானும் வேறு சமூகத்தைச் சேர்ந்த சிநேகா என்பவரும் காதலித்தோம். முதலில் எதிர்ப்பு தெரிவித்த சிநேகாவின் குடும்பத்தினர் பின்னர் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டனர். திடீரென சிநேகாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்க்கத் துவங்கினர். இதுகுறித்து சிங்கப்பூரில் இருந்த எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியா வந்த நான், டிச. 13ல் திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்தேன். திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம்.
நான், சிங்கப்பூர் சென்ற நேரத்தில், என் மனைவியை அவரது பெற்றோர் சமரசம் பேசி அழைத்துச் சென்றனர். அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இதற்கு அவர் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆணவக்கொலை செய்யும் அபாயம் உள்ளது. அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. சட்டவிரோதமாக கடத்தி மறைத்து வைத்துள்ளனர். என் மனைவி உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதே தெரியவில்லை. நீதிமன்றம் தலையிட்டு என் மனைவி சிநேகாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் மாணிக்கம் ஆஜராகி, ‘‘போலீசார் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார். இதையடுத்து போலீசார் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன. 29க்கு தள்ளி வைத்தனர்.
மேலும் செய்திகள்
ஏப்.6ல் தமிழக சட்டமன்ற தேர்தல் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சிலசமயம் மாயமாகலாம்... ஆன்லைனில் சரிபாருங்க...
தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு புகார் தெரிவிக்க போன் நம்பர் அறிவிப்பு
மயங்கி விழுந்து வாலிபர் சாவு
வீடு புகுந்து திருட்டு
இரட்டை கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மனு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்