குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
1/26/2021 2:46:35 AM
ஊட்டி,ஜன.26: குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் போல் சமூக விரோதிகள் ஊடுறுவக் கூடும் என்பதால், போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி, தமிழக - கேரள எல்லைகளான நாடுகாணி, எருமாடு, தாளூர் உட்பட மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநில எல்லைகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அண்டை மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. காட்டேஜ் மற்றும் லாட்களில் தீவிர சோதனை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக யாரேனும் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்டர்நெட் மையங்களிலும் புதிதாக யாரேனும் வந்தாலோ அல்லது சந்தேகத்திற்குரிய நபர்கள் வந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உலக வனவிலங்கு தினம் அனுசரிப்பு
கூடலூர் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா
கோடை சீசன் நெருங்கிய நிலையில் மலர் செடி உற்பத்தி மும்முரம்
கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது
ஆட்டோவில் ஏற சொல்லி அத்துமீறிய டிரைவர் கைது
சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்