எருமப்பட்டி பஸ் நிலையத்தில் சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்
1/26/2021 1:17:38 AM
சேந்தமங்கலம், ஜன.26: எருமப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்டில், மூடிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். எருமப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கிருந்து துறையூர், முசிறி, தாத்தையங்கார் பேட்டை, பெரம்பலூர், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 35 தனியார் மற்றும் 40 அரசு பஸ்கள், 16 டவுன் பஸ்கள் வந்து செல்கின்றது. பஸ் நிலைய வளாகத்துக்குள் 2 நவீன கட்டண சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயணிகளுக்காக பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2 மாதங்களாக இவைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுகாதார வளாகம் அருகே அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்தமான லாரிகளை நிறுத்தி வைத்தும், ஆடு மாடுகளை கட்டி வருவதால் பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு
டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 7 டன் கழிவுகள் எரிந்து நாசம்
சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்