நாமக்கல் ஜி.ஹெச்சை இடம் மாற்ற வேண்டும்
1/26/2021 1:17:33 AM
நாமக்கல், ஜன.26: அகில இந்திய பாரத அன்னையர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட தலைவர் சந்துரு, மகளிர் அணி தலைவி பூங்கொடி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விபரம்: நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும். இதனால் காற்று மாசு, ஒளி மற்றும் ஒலி மாசு ஏற்படாத வண்ணம் நோயாளிகள் சுகாதாரமான சிகிச்சை பெற வழி வகுக்கும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரின் மையப்பகுதியில் வட்டப்பாலங்கள் மற்றும் 2 அடுக்கு மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். வேட்டாம்பாடியில் மின்கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி, சாலைகளை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு
டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 7 டன் கழிவுகள் எரிந்து நாசம்
சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்