தாட்கோ கடன் வழங்க மறுப்பு வங்கி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
1/26/2021 1:17:24 AM
நாமக்கல், ஜன.26: நாமக்கல்லில், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பு கல்வி, பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சரஸ்ராம்ரவி துவக்கி வைத்தார். மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பட்டியல் இன மக்களின் தாட்கோ கடன் விண்ணப்பங்களை கிடப்பில் வைக்கும் நாமக்கல் மாவட்ட அனைத்து வங்கி மேலாளர்களையும் வன்கொடுமை சட்டத்தின் கிழ் கைது செய்ய வேண்டும். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் இருக்கும் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டியல் இனமக்களின் தாட்கோ கடன் விண்ணப்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்ட தாட்கோ கடன் விண்ணப்பங்களை கிடப்பில் வைத்து பட்டியல் இன மக்களை துன்புறுத்தும் நாமக்கல் மாவட்ட எல்டிஎம் மற்றும் வங்கி மேலாளர்களை வன்மையாக கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது. இதில் நிர்வாகிகள் நீதிநாயகம், ரத்தினவேல், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
மேலும் செய்திகள்
வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு
டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 7 டன் கழிவுகள் எரிந்து நாசம்
சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்