பொன்னையிலும் பறவைக்காய்ச்சல் பீதி பறவைகள் செத்து மடிவதால் பரபரப்பு ஆற்காட்டை தொடர்ந்து
1/26/2021 1:04:06 AM
பொன்னை, ஜன.26: ஆற்காடு அருகே பறவைகள் மர்மமாக இறந்துள்ள நிலையில், பொன்னை அருகேயும் இறந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பறவைக்காய்ச்சல் பீதியில் உள்ளனர். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி புத்துக்கோயில் அருகே நேற்று காலை மர்மமான முறையில் ஒரு மைனா, 2 சிட்டுக்குருவிகள் இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து ஏராளமானோர் அங்கு வந்து பார்த்து சென்றனர். மேலும், தகவலறிந்த பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பறவைகளை பார்வையிட்டார். பின்னர், அவை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பொன்னை கால்நடைத்துறை மருத்துவர் பிருந்தா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், மைனாவின் உடல் பாகங்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் நாராயணபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் மர்ம மான முறையில் கோழிகள், காகம், மைனா உள்ளிட்டவை இறந்து கிடந்தன. தகவலறிந்த கால்நடை டாக்டர்கள் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். பின்னர், அவற்றின் உடல் பாகங்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பறவைகள் மர்மமான முறையில் செத்து மடிவதால் ஆற்காடு, பொன்னை பகுதிகளை சேர்ந்த மக்கள் பறவைக்காய்ச்சல் பரவுவதாக பீதியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு
சோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்
427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்
வேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா? கலெக்டர் நேரில் ஆய்வு
தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா? அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்