வாக்காளர் பட்டியலில் பேரறிஞர் அண்ணா புகைப்படம்
1/25/2021 2:03:10 AM
தேர்தல் ஆணையம் கடந்த 20ம் தேதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்துள் யக்க ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கழகத்தினர் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பெரும்புதூர் தொகுதியில் அடங்கிய நந்தம்பாக்கம் ஊராட்சி வாக்காளர் பட்டியலை கழகத்தினர் சரிபார்த்த போது பாகம் எண் - 109 தொடர் எண் 220-ல் வீரராகவன் என்ற வாக்காளர் பெயரும், அதற்கு நேராக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது பற்றி மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் குன்றத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோரிடம் நந்தம்பாக்கம் கிளைக் கழகச் செயலாளர் வி.நாளியப்பன் புகார் செய்தார். தி.மு.க.வைச் சேர்ந்த வாக்காளர் வீரராகவன் புகைப்படத்துக்கு பதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படம் எப்படி வெளியானது என்பது தெரியவில்லை. இது போன்ற வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை உடனே தேர்தல் ஆணையம் சரி செய்திட வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண்
திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்
100% வாக்களிப்பை ஊக்குவிக்க மகளிருக்கு கோலப்போட்டி
வகுப்புகளை நடத்தக்கோரி நர்சிங் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனா பாதிப்பால் 499 பேர் உயிரிழப்பு
மகளிர் தின விழா கொண்டாட்டம்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!