டிராக்டர் திருடிய வாலிபர் கைது
1/24/2021 8:26:31 AM
திருக்கோவிலூர், ஜன. 24: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரின் டிராக்டரை கடந்த மூன்று நாட்களுக்கு முன் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மணலூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி ராஜீ உத்தரவின்பேரில் ஆய்வாளர் செல்வம், காவல் உதவி ஆய்வாளர்கள் அகிலன், திருமால், செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் ஜா.சித்தாமூர் பகுதியில் மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அகிலன், காவலர்கள் காதர்கான், பிரகாஷ், சிவஜோதி, வீரப்பன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தபோது டிராக்டரை ஓட்டி வந்த நபர் திருக்கோவிலூர் அடுத்த கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் என்பதும், இவர் கடந்த 2016ம் வருடம் வளவனூர் கிராமத்தில் டிராக்டர் திருடி வந்ததும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அகரம் கிராமத்தில் புதிய டிராக்டர் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 டிராக்டர்கள், ரொட்டேடர் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
மாஜி அமைச்சர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் பாஜகவுடன் கூட்டணியா? ரங்கசாமி பரபரப்பு பேட்டி
புதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள் கவர்னர் தமிழிசை மீண்டும் ஆய்வு
உலக மகா நடிப்புடா சாமி.. டெபாசிட் தொகைக்கு ₹1 வசூலிக்கும் தாமரை
எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மாஜி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர் காங்கிரசில் இணைகிறார்
₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
புதுவையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்