அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே தகராறு
1/24/2021 8:25:03 AM
உளுந்தூர்பேட்டை, ஜன. 24: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு வரும் போது பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல், வெளிப்பகுதியிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். பல அரசு பேருந்துகள் போக்குவரத்திற்கு இடையூறாக தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை இதேபோல் ஏற்பட்ட தகராறில் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்நிலைய போலீசார் பேருந்துகளை உடனடியாக அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து இது போன்று நடைபெற்று வரும் பிரச்னைகளை தடுக்க வெளியூரில் இருந்து வரும் அனைத்து அரசு பேருந்துகளும் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாஜி அமைச்சர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் பாஜகவுடன் கூட்டணியா? ரங்கசாமி பரபரப்பு பேட்டி
புதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள் கவர்னர் தமிழிசை மீண்டும் ஆய்வு
உலக மகா நடிப்புடா சாமி.. டெபாசிட் தொகைக்கு ₹1 வசூலிக்கும் தாமரை
எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மாஜி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர் காங்கிரசில் இணைகிறார்
₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
புதுவையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்