நாட்டு துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடிய 8 பேர் கைது
1/24/2021 8:10:22 AM
திருக்கோவிலூர், ஜன. 24: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக்குக்கு திருக்கோவிலூர் காட்டு வனப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசங்களை விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி ராஜீ மேற்பார்வையில் ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துரிஞ்சிப்பட்டு- நெடுமுடையான் வனப்பகுதியில் 8 பேர் நாட்டு துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடினர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் சிவலிங்கம்(50), பெரியதம்பி மகன் அய்யப்பன்(33), குள்ளன் மகன் ஏழுமலை(51), சுப்ராயன் மகன் கதிர்வேல்(30), குட்டையன் மகன் சக்திவேல்(65), நாராயணசாமி மகன் முத்துலிங்கம்(42), ராமசாமி மகன் கேசவன்(51), காத்தவராயன் மகன் ராஜா(55) என்பது தெரியவந்தது. இவர்களை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்து 2 நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
மாஜி அமைச்சர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் பாஜகவுடன் கூட்டணியா? ரங்கசாமி பரபரப்பு பேட்டி
புதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள் கவர்னர் தமிழிசை மீண்டும் ஆய்வு
உலக மகா நடிப்புடா சாமி.. டெபாசிட் தொகைக்கு ₹1 வசூலிக்கும் தாமரை
எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மாஜி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர் காங்கிரசில் இணைகிறார்
₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
புதுவையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்