போலி பெயிண்ட் விற்பனை செஞ்சியில் கடை உரிமையாளர், விற்பனை முகவர் அதிரடி கைது
1/24/2021 8:09:51 AM
செஞ்சி, ஜன. 24: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பெயிண்ட் கடைகளில் போலியாக சில முன்னணி நிறுவனத்தின் பெயிண்ட் விற்பனை செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு புகார் சென்றது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கம்பெனி ஊழியர்கள் 8 பேர் கொண்ட குழுவினர் செஞ்சி பகுதியில் உள்ள பெயிண்ட் கடைகளில் மேற்கொண்ட ரகசிய சோதனையில் கம்பெனி பெயரில் போலியாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களை கைப்பற்றி செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், போலீசார் மேற்கொண்டு, விசாரணை செய்து கொண்டு இருந்த போது போலி பெயிண்ட் விற்பனை முகவராக வந்த சென்னையை சேர்ந்த பெயிண்ட் விற்பனை முகவர் ராயபுரம் குமார் (57), செஞ்சி திண்டிவனம் சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வந்த தாமனூர் கிராமத்தை சேர்ந்த சூசை மகன் தேவராஜ் (42) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவராஜிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள போலி பெயிண்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் அதிகளவு போலி பெயிண்ட் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை பயன்படுத்தினால் ஒரே வருடத்தில் மங்கி விடுவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இது போன்று கம்பெனி பெயர்களை பயன்படுத்தி போலியாக பெயிண்ட் விற்பனை செய்து அதிக லாபம் பார்த்து வருபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
செஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
மருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி
கடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
கடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை
ஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்