சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி திருச்செந்தூரில் விசிக நூதன போராட்டம்
1/24/2021 8:07:37 AM
திருச்செந்தூர், ஜன. 24: திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் ராமசாமிபுரம் பகுதியில் மழையால் சேதமடைந்து இருபுறமும் குளம் போல் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி துறையை வலியுறுத்தி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின், சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கப்பல் விடும் நூதன போராட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி தலைமை வகித்தார்.
இதில் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல்முத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், ஒன்றிய துணை செயலாளர்கள் கண்ணன், செஞ்சுடர், சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் நடுவை பெருமாவளவன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, தொண்டரணி ஒன்றிய துணை அமைப்பாளர் இசக்கிமுத்து, சமூக நல்லிணக்கப் பேரவை ஒன்றிய அமைப்பாளர் வல்லரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
புதூர் அருகே பால் வாகனத்தில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்.
சாத்தான்குளம் பகுதியில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு பணி தீவிரம்
வைகுண்டம் தொகுதியில் காங். சார்பில் போட்டியிட ஊர்வசி அமிர்தராஜ் விருப்ப மனு தாக்கல்
சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!