வெற்றிலை ஒருகட்டு ரூ.2ஆயிரத்துக்கு விற்பனை
1/24/2021 5:01:15 AM
பொள்ளாச்சி, ஜன. 24: பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று, வெற்றிலை விற்பனை மந்தமானது. ஒருகட்டு மீண்டும் ரூ.2ஆயிரமாக குறைந்தது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று வெற்றிலை ஏலம் நடந்தது. ஏலத்திற்கு சுற்றுவட்டார பகுதியிலிருந்து வெற்றிலை வரத்து குறைவானது. கரூர், திருச்சி பகுதியிலிருந்து ஓரளவு வெற்றிலை வரத்து இருந்தது. இருப்பினும் விற்பனை மந்தத்தால் குறைவான விலைக்கு ஏலம்போனது. கடந்த வாரத்தில் சுமார் 6ஆயிரம் முதல் 6500வரை எண்ணம் கொண்ட ஒருகட்டு வெற்றிலை அதிகபட்சமாக ரூ.2500வரை ஏலம்போனது. ஆனால் நேற்று ஒருக்கட்டு வெற்றிலை அதிகபட்சமாக ரூ.2000வரை என மீண்டும் குறைவான விலைக்கு ஏலம்போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வியாபாரிகள் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்திலிருந்து பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரிப்பால், பல இடங்களில் வெற்றிலைகள் செடியிலேயே வாடி வதங்கியதுடன் அறுவடை பணி மந்தமானது. இதனால், மார்க்கெட்டுக்கு வெற்றிலை வரத்து குறைய துவங்கியதுடன், கூடுதல் விலைக்கு ஏலம்போனது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, பொங்கல் பண்டிகையையொட்டி, ஒருக்கட்டு ரூ.3ஆயிரம் என கூடுதல் விலைக்கு ஏலம்போனது. ஆனல் தற்போது விற்பனை மந்தமானதால் ஒருக்கட்டு ரூ.2 ஆயிரத்துக்குத் தான் ஏலம் போனது, என்றனர்.
மேலும் செய்திகள்
கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 727 பேருக்கு கொரோனா
கோவையில் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளது
சம்பளம் கேட்டதால் ஆத்திரம் டிரைவரை தாக்கிய டிராவல்ஸ் ஓனர் மீது வழக்கு
தமிழகத்தில் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்குவதே என் நோக்கம்
கோவை மாவட்டத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்க நோயாளிகள் அலைக்கழிப்பு
கோவை-திருச்சி ரோடு மேம்பாபணி 80 சதவீதம் நிறைவு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!