பராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்
1/24/2021 4:50:13 AM
ஊட்டி, ஜன. 24: பராமரிப்பு பணி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை சீசன் நெருங்கிய நிலையில், அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு, புல் மைதானம் சீரமைப்பு, குளங்கள் சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் துவக்கம் முதல் கடந்த வாரம் வரை ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை பெய்து வந்தது. இதனால், பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்தும் பழுதடைந்தன. பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம், சிறிய புல் மைதானம் மற்றும் பெர்னஸ் மைதானம் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியது.
இருப்பினும் சுற்றுலா பயணிகள் இந்த மைதானங்களில் வலம் வந்த நிலையில், புல் மைதானங்கள் பழுதடைந்தது. இதனால், முதற்கட்டமாக சிறிய புல் மைதானம் பராமரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த புல் ைமதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் முடிந்தவுடன் பெரிய புல் மைதானம் மூடப்பட்டு சீரமைக்கும் பணிகள் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தீ பந்தம் வீசி யானையை கொன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள வாலிபரை பிடிக்க போலீஸ் உதவியை நாடியது வனத்துறை
வெடி பொருட்கள் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
நீலகிரியில் ரூ.6.69 லட்சம் பறிமுதல்
மலை காய்கறி விவசாயம் பாதிப்பு
ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுசுவர் ஓராண்டாகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் அதிருப்தி
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்