குன்னூரில் சினிமா படப்பிடிப்புகள் துவக்கம்
1/24/2021 4:48:47 AM
குன்னூர், ஜன. 24: நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பசுமையான புல்வெளிகள், மலைகள் உள்ளிட்ட இடங்களில் பரவலாக திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இதில், குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெறாத பல்வேறு மொழி திரைப்படங்களே இல்லை என்றால் மிகையாகது. அதன் பின் ஊட்டியில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் சினிமா படங்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் நீலகிரியில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவது குறைந்தது. ஆண்டுக்கு 5 முதல் 10 படங்களின் சூட்டிங் மட்டுமே நடைபெறுகிறது. தற்போது குறைந்த அளவிலான படப்பிடிப்புகளே நடத்தப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது, படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் தமிழ் திரைப்பட படப்பிடிப்பு நேற்று நடந்தது. இதில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதனால், சினிமா படப்பிடிப்பை நம்பியுள்ள உள்ளூர் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தீ பந்தம் வீசி யானையை கொன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள வாலிபரை பிடிக்க போலீஸ் உதவியை நாடியது வனத்துறை
வெடி பொருட்கள் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
நீலகிரியில் ரூ.6.69 லட்சம் பறிமுதல்
மலை காய்கறி விவசாயம் பாதிப்பு
ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுசுவர் ஓராண்டாகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் அதிருப்தி
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்