அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
1/24/2021 4:39:14 AM
ஈரோடு, ஜன. 24: அந்தியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், பவானிசாகர் தொகுதி செயலாளர் தம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். வேளாண் தொடர்பான குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசே இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சண்முகம், மாநில துணை செயலாளர் ஈஸ்வரன், வடக்கு மாவட்ட பொருளாளர் தங்கவேல், துணை செயலாளர் பொன்னரசு, மாநில செயற்குழு உறுப்பினர் பில்லா மணி, மேற்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை சித்ரா, கோபி சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் திருமா பூபதி, வடக்கு மாவட்ட துணை செயலாளர் சாரதா, வணிகர் அணி, மாவட்ட அமைப்பாளர்கள் துரைசாமி, மாரசாமி, மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாநகரில் இன்று மின்தடை
மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் அதிகரிப்பு
8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
கூடுதல் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதி இல்லை
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!