சாத்தூரில் நேதாஜி பிறந்தநாள் விழா
1/24/2021 4:22:08 AM
சாத்தூர்,ஜன.24; சாத்தூரில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சாத்தூர் முக்குராந்தலில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் 125வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் பசுபதித்தேவர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். சாத்தூர் நகர செயலாளர் மகேஷ்வரன், ஒன்றிய செயலாளர் கண்ணன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் பரமசிவம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கிலிப்பாண்டி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டி கிராமத்தில் நேதாஜி பிறந்த நாள் விழா நகர தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் பணம் வசூல் பொதுமக்கள் புகார்
ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம் தங்கம்தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார்
மந்தித்தோப்பு ஓடையில் பாலம் கட்ட வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்
குழந்தைகள் பாதுகாப்பு தினம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!