SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

1/24/2021 4:16:57 AM

சிவகங்கை, ஜன.24: சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் மற்றும் இதர அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அவசியம். சிவகங்கை மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் 12 வட்டாரத்திலும் வட்டார அளவில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடந்து வருகிறது. ஜன.27 சிங்கம்புணரி, ஜன.29 சிவகங்கை, பிப்.2 திருப்பத்தூரில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 4 மற்றும் ஆதார் கார்டு நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

  • hgoteell__sss

    தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

  • 04-03-2021

    04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்