பேரிடர் மேலாண்மை ஒத்திகை
1/24/2021 4:13:56 AM
திருமங்கலம், ஜன. 24: திருமங்கலம் தீயணைப்புத்துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை, திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் நான்குவழிச்சாலையில் நடந்தது. திருமங்கலம் ஆர்டிஓ சவுந்தர்யா தலைமை வகித்தார். ஐஓசி மேலாளர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தார். திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
காஸ் சிலிண்டரில் தீப்பிடித்தால் உடனே சிலிண்டர் வெடிக்காது எனவும், அதற்குள் சிலிண்டரில் பற்றிய தீயை தண்ணீரால் நனைத்த சாக்கு கொண்டு அணைத்துவிட முடியும், பெட்ரோல் ஏற்றி வரும் லாரி தீப்பிடித்தால் எப்படி தீயை அணைப்பது என்பதனையும் ஒத்திகையாக தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் திருமங்கலம் தாசில்தார் முத்துபாண்டியன், தனிப்பிரிவு எஸ்ஐ பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மதுரையில் கொரோனா மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்
திருமண மண்டபத்துக்கு பூமி பூஜை
வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக டிஜிட்டல் போர்டுகள் கடைகள், வீடுகளில் கட்டுகின்றனர்
சேடபட்டி-திருமங்கலம் மார்க்கத்தில் கதிரடிக்கும் களமானது சாலை போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகள் அவதி
துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு