அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா?
1/24/2021 4:03:12 AM
பாபநாசம், ஜன.24: பாபநாசம் அருகே அம்மாப் பேட்டை வட்டாரத்தில் வட கிழக்குப் பருவ மழையினால் பாதிப்படைந்த நெற் பயிர்களை, மாநில திட்டங்களுக்கான துணை இயக்குநர் கோமதிதங்கம், பயிர் காப்பீடு உதவி இயக்குநர் சுதா ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் அடுத்த மாரியம்மன் கோயில் ஆலங்குடியில் பயிர் சாகுபடி பரப்பு அடங்கலில் விவசாயி வாரியாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதா, பதிவுச் செய்யப்பட்டுள்ள பரப்புகளில் பாதிப்பு விபரம் சரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகின்றதா போன்றவற்றை கிராம கணக்குகளையும், விவசாயிகள் மற்றும் பாதிப்பு வயல்கள் ஆகியவற்றையும் சரிப்பார்த்து ஆய்வு செய்தனர். பயிர் பாதிப்பு விபரங்கள் உடனே படிவம் 1ல் பதிவேற்றம் செய்யப்பட்டு தாலுகா அலுவலகம் மூலமாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று விஏஓ, உதவி வேளாண் அலுவலரிடம் தெரிவித்தனர். ஆய்வின் போது ஆலங்குடி ஊராட்சி தலைவர் புண்ணிய மூர்த்தி, விஏஓ பூபதி ஆகியோர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை அம்மாப் பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா செய்திருந்தார்.
மேலும் செய்திகள்
வெயிலிலிருந்து தப்பிக்க நடைவிரிப்பு 2021-22ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு
சாலையில் மாடுகள் திரிந்தால் நடவடிக்கை
பேராவூரணி பேரூராட்சி எச்சரிக்கை தேசிய அறிவியல் நாள் விருதுகள் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை வழங்கியது
நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி ரத்ததான முகாம்
களப் பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் எண்ணை பனை நடவுப்பணி
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதில் சந்தேகமா தேர்தல் அலுவலரின் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்