கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
1/24/2021 4:00:41 AM
திருமயம், ஜன. 24: கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழாநிலைக்கோட்டை அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ ரகுபதி பங்கேற்று மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கினார். இதைதொடர்ந்து கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் அந்த பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரிமளம் ஒன்றியக்குழு தலைவர் மேகலா முத்து, ஒன்றிய கவுன்சிலர் கல்லூர் மல்லிகா அண்ணாமலை, தகவல் தொழில்நுட்ப அணி இளையராஜா, காசி பொற்செல்வன், ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி
விவசாயிகளுக்கு நிலைக்கத்தக்க மானாவாரி இயக்க பயிற்சி முகாம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குைறந்த அளவில் பேருந்துகள் இயக்கம்
கறம்பக்குடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!