புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கம் புதுகையில் ஆர்ப்பாட்டம்
1/24/2021 4:00:26 AM
புதுக்கோட்டை, ஜன. 24: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மாவட்ட தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி மாவட்ட தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் தர் நிறைவு செய்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ரத்தினம், போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்று பேசினர். அப்போது புதிய வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய வேண்டும். புதிய மின் வரைவு மசோதாவை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகள் 4 ரத்து செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ படை வீரர்கள் 90 பேர் புதுகை வருகை
60 வயதுக்கு மேலான முதியோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்
கலெக்டர் தகவல் குறைதீர்க்கும் கூட்டம் ரத்தால் புதுகை கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டு சென்ற மக்கள்
வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி செய்யப்படும்
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும்
திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவு 100% வாக்களிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்