கூத்தியம்பேட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைக்காத அவலம்
1/24/2021 3:55:17 AM
கொள்ளிடம், ஜன. 24: கூத்தியம்பேட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளாக கைவிடப்பட்ட சாலையை மீண்டும் மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வெட்டுமாகளம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் மிக குறுகிய வரப்பாக இருந்தது. 2000ம் ஆண்டில் கிராம மக்களின் கோரிக்கைய ஏற்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு தார் சாலையாக மேம்படுத்தப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக விவசாயிகள், தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள வெட்டுமா களத்துக்கும், அப்பகுதியில் உள்ள வயல் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வந்தனர்.
ஆனால் காலப்போக்கில் அந்த சாலையை இதுவரை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை மேம்படுத்தக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக இந்த சாலையை மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம பொதுமக்கள் சார்பில் விவசாயி கார்த்திகேயன் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சாக்கு பற்றாக்குறையால் 16,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேக்கம்
தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய விசி நிர்வாகிகள் மீது வழக்கு
கலெக்டர் தகவல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் 150 ஆண்டுகளுக்கு பிறகு கீரங்குடி குடவரசி அம்மன் கோயிலில் தெப்ப திருவிழா
வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனை கண்காணிக்கப்படும்
3 பறக்கும் படைகள் அமைப்பு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக விடையாற்றி விழா
நாகை மாவட்டத்தில் 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை