ஆச்சாள்புரம் ஏழு பிடாரி கோயிலில் உண்டியலை திருட முயற்சி
1/24/2021 3:54:54 AM
கொள்ளிடம், ஜன. 24: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் ஏழு பிடாரி கோயிலில் உண்டியலை திருட முயன்ற 2 பேர், பொதுமக்கள் விரட்டியதால் தப்பியோடினர். இதையடுத்து அவர்கள் வந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சியை சேர்ந்த மேலகரம் கிராமம் உள்ளது. இங்கு ஏழு பிடாரி கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக சில்வர் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் பைக்கில் வந்தனர். பின்னர் கோயி்ல் முன்புள்ள உண்டியலை எடுத்து கொண்டு ஒரே பைக்கில் தப்பிக்க முயற்சி செய்தனர்.
அப்போது இதை பார்த்து அப்பகுதி வழியாக வந்த முருகன் சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டதும் அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த மர்மநபர்கள் 2 பேர் தங்களது பைக் மற்றும் உண்டியலை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். 2 மர்மநபர்கள் வந்த பைக்கின் நம்பர் பிளேட்டில் ஆங்கிலத்தில் ரயில்வே என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் கிராம மக்கள் சார்பில் கோயிலை பராமரித்து வரும் கலியபெருமாள் (40) புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சாக்கு பற்றாக்குறையால் 16,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேக்கம்
தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய விசி நிர்வாகிகள் மீது வழக்கு
கலெக்டர் தகவல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் 150 ஆண்டுகளுக்கு பிறகு கீரங்குடி குடவரசி அம்மன் கோயிலில் தெப்ப திருவிழா
வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனை கண்காணிக்கப்படும்
3 பறக்கும் படைகள் அமைப்பு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக விடையாற்றி விழா
நாகை மாவட்டத்தில் 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை