கொங்கணாபுரத்தில் 8,100 பருத்தி மூட்டை ₹2.10 கோடிக்கு ஏலம்
1/24/2021 3:50:04 AM
இடைப்பாடி, ஜன.24: கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று, விவசாயிகள் கொண்டுவந்த 8,100 பருத்தி மூட்டைகள் ₹2.10 கோடிக்கு ஏலம் போனது. இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 8,100 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,450 முதல் ₹6,769 வரையும், டிசிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹7,200 முதல் ₹8,491 வரையுமாக மொத்தம் ₹2.10 கோடிக்கு ஏலம் போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
காவிரியில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு
ஐந்துரோட்டில் 27 முறை ஹெல்மெட் அணியாமல் சென்றவர் சிக்கினார் ₹2,700 அபராதம் வசூல்
விபத்தில் மெக்கானிக் பலி
3ம் கட்டமாக 66 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வரத்து
காவிரி நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா