கிழக்கு-மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
1/24/2021 3:44:50 AM
தர்மபுரி, ஜன.24: தர்மபுரி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளை கேட்டறிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான அவசர ஆலோசனை கூட்டம் இன்று(24ம்தேதி) நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, இன்பசேகரன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 1ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று(24ம் தேதி) காலை 11 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் இந்நாள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
5 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் 12,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘பாடி கேமரா’ வழங்கல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு
கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பெண் விவசாயி திடீர் தர்ணா
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்