நிவர் புயல், பருவமழை நடவடிக்கைகள் தேசிய பேரிடர் மேலாண்மை மைய குழுவினர் ஆய்வு
1/24/2021 2:45:21 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில், தேசிய பேரிடர் மேலாண்மை மைய குழு துணை ஆலோசகர் நவல்பிரகாஷ், சார்பு செயலர் பங்கஜ்குமார், மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி ஆகியோர் நிவர்புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்த சீரமைப்பு பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை மேலாண்மை மைய குழு உயர் அலுவலர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து நூக்கம்பாளையம், மண்ணிவாக்கம், முடிச்சூர், நந்திவரம் நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் எடுக்கப்பட்ட சீரமைப்பு பணிகளான கரைகளை பலப்படுத்துதல், தூர் வாரி சீரமைத்தல், மழை காலங்களில், குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீர் வெளியேற்ற தேவையான வழிவகைகளை செய்தல் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
பின்னர், மறைமலைநகர் நகராட்சி கூட்டரங்கில் பருவமழை மற்றும் நிவர் புயலால் நீர் சூழப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடந்த பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஜான்லூயிஸ், தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை மைய குழு உயர் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் .ராதாகிருஷ்ணன், தாம்பரம் ஆர்டிஓ ரவிச்சந்திரன் ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
பல கோடி மதிப்பில் அரசு துறை கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
மணிகண்டீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்
திமுக முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமணம்: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு
படூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு? அங்கத்தினர் சரமாரி புகார்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்