மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
1/22/2021 5:49:52 AM
திருத்துறைப்பூண்டி, ஜன.22: மத்திய அரசை கண்டித்து புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகர குழு சார்பில் நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் தலைமை தபால் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் மருதாசலம் முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ. நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர செயலாளர் சிவசாகர், நகர தலைவர் மதன்சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, கிளை செயலாளர் கந்தசாமி, லெனின், பிச்சைமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விட்டுக்கட்டியில் நடந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளை செயலாளர்கள் முருகேஷ், வீரசேகரன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீடாமங்கலம்: நீடாமங்கலம் தபால் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். தேவங்குடி தபால் அலுவலகம் முன் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். பெரம்பூர் தபால் அலுவலகம் முன் வி.தொ.ச.ஒன்றியக்குழு ராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பேசினர்.
மேலும் செய்திகள்
நிறுத்தப்பட்ட ஊக்க தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும்
வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் கைது 5 பேர் மீது வழக்கு
கோட்டூர் அருகே மகளின் கழுத்தை அறுத்த ‘பாசக்கார’ தந்தை கைது
அரவைக்காக தர்மபுரிக்கு 2,000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
வேளாண் மாணவிகளுக்கு கூட்டு பண்ணைய பயிற்சி
திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுத்து நிறுத்த பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்