மைலம்பாடி விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் தொடக்கம்
1/22/2021 3:55:05 AM
ஈரோடு, ஜன. 22: பவானி மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வருகின்ற 28ம் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய், நிலக்கடலை மறைமுக ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் போட்டி விலை மூலம் கொள்முதல் செய்யலாம். நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் கல், மண், தூசி நீக்கி, தரம் பிரித்து புதன்கிழமை மாலை 4 மணிக்குள் கொண்டு வர வேண்டும். தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், தரம் பிரித்து வியாழன் அன்று காலை, 8 மணிக்குள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வர வேண்டும்.
விற்பனையாகும் விளை பொருளுக்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே விவசாயிகள் தங்களது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முகப்பு பக்கம் நகல் வழங்க வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கொரோனா விதிகளை மீறிய 32 வாகனங்கள் மீது நடவடிக்கை
அறுவடை முடியும் நிலையில் மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை விலை உயர்வு
பவானி அரசு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி இல்லை
மீன் மார்க்கெட்டு விடுமுறை எதிரொலி காய்கறி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
பேன்சி கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்