டிஆர்ஓ தகவல் கரூர் நகராட்சி பிரதான சாலையில் சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
1/22/2021 3:24:32 AM
கரூர், ஜன. 22: கரூர் நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கரூர் நகராட்சியை சுற்றிலும் உள்ள சில பகுதி சாலையோரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் குப்பைகளை கொட்டி வைத்து தீயிட்டு எரிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிக்கப்படுவதோடு, விபத்துகளிலும் சிக்க நேரிடுகிறது. மேலும் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாகின்றனர். மேலும், பஞ்சமாதேவி அருகம்பாளையம் சாலையிலும் இதுபோல அவ்வப்போது குப்பைகள் எரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே, குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்கில் கொண்டு செல்லாமல் இதுபோல எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் குப்பைகள் எரிக்கப்படுவதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் சுகாதார சீர்கேட்டில் இரட்டை வாய்க்கால்
பள்ளப்பட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்
தோகைமலையில் உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் சிதிலமடைந்து கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்
சீரமைக்க கோரிக்கை பதிவு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் அலங்கார மணவறை ஏற்பாடு
தாந்தோணிமலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!