தீ செயலி குறித்த விழிப்புணர்வு
1/22/2021 1:08:27 AM
கெங்கவல்லி, ஜன. 22: தீயணைப்புத்துறையின் சேவைகளை, மக்கள் எளிதில் பெற, ‘தீ’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்காட்டில் தீ செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில், தீ செயலிலை பதிவிறக்கம் செய்து, சுய விபரங்களை பதிய வேண்டும். தீவிபத்து, வெள்ளம், மழை பாதிப்பு உள்ளிட்ட சமயங்கள் ஏற்படும் போது, தீ செயலியில் உள்ள பட்டனை ஒருமுறை அழுத்தினால், உடடியாக தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும். மேலும் பாதிக்கப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல் ஜிபிஆர்எஸ் மூலம் தெரியவரும்.
இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்தி, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்கள். இவ்வாறு நிலைய அலுவலர் கணேசன் தெரிவித்தார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுக்கு செல்போனில் தீ செயலி பதிவிறக்கம் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். அதேபோல் கெங்கவல்லி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில், வீரர்கள் நேற்று கெங்கவல்லி பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு தீ செயலி பயன்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர்.
மேலும் செய்திகள்
ஓமலூரில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த பெண்ணின் கண்கள் தானம்
பக்தர்கள் பால்குட ஊர்வலம்
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து •தடுத்த மாமியாரையும் குத்தினார் •தொழிலாளியை பிடித்து விசாரணை
மக்காச்சோள கதிர்கள் தீயில் எரிந்து சாம்பல்
மாற்றுத்திறன், 80 வயதை கடந்த 87,770 பேருக்கு தபால் ஓட்டு
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!