நெற்பயிரை தாக்கும் வெட்டுப்புழு தடுக்கும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்
1/22/2021 12:50:28 AM
வேலூர், ஜன.22: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நெற்பயிரை தாக்கும் வெட்டுப்புழு தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திமிரி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், குடியாத்தம், கந்திலி, அணைக்கட்டு, கணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது நவரை பருவத்தில் நெற்பயிர் நாற்றங்களில் நடப்பட்டுள்ளது. இதில் வெட்டுபுழு தாக்குதல் கண்காணிக்கும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வெட்டுப்புழுவனாது நாற்றுக்களையும் வளர்ந்த நெற்பயிர்களையும் வெட்டி உண்ணும். அதிகளவில் தாக்கும் போது பயிரனாது மாடு மேய்ந்த வயலாக காட்சியளிக்கும். புழுக்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக ஒரு வயிலிருந்து மற்றொரு வயலுக்கு சென்ற தீவிரமாக தாக்கும்.
இந்த வெட்டுப்புழுவின் அந்துப்பூச்சிகள் அடர்பழுப்பு நிறத்தில், முன் இறக்கைகளில் முக்கோண வடிவ கரும்புள்ளிகளுடனும், பின் இறக்கைகளில் பழுப்பு கலந்து வெள்ளை நிறத்தில் ஒரங்களில் மெல்லிய கருப்பு நிறத்துடன் காணப்படும்.
இவை 300 முதல் 400 முட்டைகளை குவியலாக இலைகளின் மேலிட்டு அதனை தன் ரோமங்களால் முடிவிடும். புழுக்களின் இளம் வளர்ச்சி நிலையில் மங்கிய பச்சை நிறத்திலும் பக்கவாட்டில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற கோடுகளுடன் காணப்படும். வளர்ந்த புழுக்கள் அடர் பழுப்பு அல்லது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் பக்கவாட்டில் கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். முதிர்ந்த புழுக்கள் மண்ணில் கூட்டுப்புழுவாக மாறுகின்றது.
இப்புழுக்களின் தாக்குல் நாற்றங்காலில் தென்பட்டால், மாலை நேரத்தில் நாற்றங்களிலிருந்து நீரை வடித்து குளோரிபைரிபாஸ் 20 இசி, மருந்தினை 80 மிலி, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து 8 சென்ட் அளவுள்ள நாற்றங்களில் தெளித்திட வேண்டும். நடப்பட்ட வயலில் இப்புழுக்களின் தாக்குதல் தென்படும்போது மாலை நேரத்தில் குளோரிபைரிபாஸ் 20 இசி மருந்தினை எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் வயிலின் வரப்புகளில் உள்ள களை செடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வயலில் ஆங்காங்கே டி வடிவில் குச்சிகளை நட்டு அதன் மேல் வந்தமரும் பறவைகள் இப்புழுக்களை உண்டு கட்டுப்படுத்திட வாய்ப்பு உண்டு. ேமலும் விளக்கு பொறி வைத்து அந்து பூச்சிகளை கண்காணித்து, வெட்டுப்புழு தாக்குலை கட்டுப்படுத்தலாம். அதேபோல், மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் அலுவலங்களில் வெட்டுப்புழு தாக்குதல் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு
சோளிங்கர் காப்பகத்தில் மீட்கப்பட்ட படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி காட்பாடி அரசு பள்ளியில் சேர்ப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 88,900 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்
427 துப்பாக்கிகள் ஒப்படைப்பு வேலூர் மாவட்டத்தில்
வேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா? கலெக்டர் நேரில் ஆய்வு
தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரமா? அனுமதி கட்டாயம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்