தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
1/21/2021 5:33:46 AM
திருவில்லிபுத்தூர், ஜன.21: திருவில்லிபுத்தூரில் கூலி தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் பழைய புது தெருவை சேர்ந்தவர் முத்து(35). இவர் பந்தல் போடும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது தாயார் வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டார். கடைக்குச் செல்லும்போது வழக்கம்போல் சாவியை வீட்டின் அருகில் வைத்து விட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி சாவியை எடுத்து திறந்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடிச் சென்றார்.
இது குறித்து திருவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ராக்கி மூலம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ராக்கி வீட்டின் அருகே உள்ள சக்கர குள படிக்கட்டுகளில் இறங்கி நின்றுவிட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி
தொடர் மழையால் விருதுநகரில் குளங்களாக மாறும் சாலைகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
குடும்ப தகராறு காரணமாக ெசல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் டிரைவரால் காரியாபட்டியில் பரபரப்பு
திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பை நேரில் ஆய்வு
சாத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்