மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
1/21/2021 4:43:31 AM
நாமக்கல், ஜன.21: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, இலவச லேப்டாப் வழங்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18ம் கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 3 ஆண்டுக்கு மேல் ஆகியும் லேப்டாப் வழங்கவில்லை. தற்போது 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் உடனடியாக லேப்டாப் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வழியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்த்தி, தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு
சேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
தடுப்பூசி பற்றாக்குறையால் வெறிச்சோடிய சுகாதார மையம்
கொரோனா தொற்று அதிகரிப்பு
சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
கள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்