SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறுதி பட்டியல் வெளியீடு புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.48 லட்சம் வாக்காளர்கள்

1/21/2021 4:22:39 AM

புதுக்கோட்டை, ஜன. 21: புதுக்கோட்டையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 13.48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 53,124 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டார். பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்க திருத்தம்-2021க்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6,65,376 ஆண் வாக்காளர்கள், 6,83,516 பெண் வாக்காளர்கள் மற்றும் 72 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13,48,964 வாக்காளர்கள் உள்ளனர்.

2021ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் (16.11.2020ன்படி) மொத்தம் 13,10,068 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடந்த 2021ம் ஆண்டுக்கான சிறப்புமுறை சுருக்க திருத்தத்தின்போது 24,384 ஆண் வாக்காளர்கள், 28,728 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 53,124 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடந்த 2021ம் ஆண்டுக்கான சிறப்புமுறை சுருக்க திருத்தத்தின்போது 7,781 ஆண் வாக்காளர்கள், 6,443 பெண் வாக்காளர்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 14,228 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடந்த 2021ம் ஆண்டுக்கான சிறப்புமுறை சுருக்க திருத்தத்தின்போது மொத்தம் 6,375 வாக்காளர்கள் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

16.11.2020 முதல் 15.12.2020 வரை நடந்த 2021ம் ஆண்டுக்கான சிறப்புமுறை சுருக்க திருத்தத்தின்போது மொத்தம் 3,019 வாக்காளர்கள் ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடிகள் மற்றும் கிராம எல்லைக்குள் 843 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. 2021ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 18- 19 வயதுடைய 33,200 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், தாசில்தார்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

  • hgoteell__sss

    தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்