53,124 பேர் புதிதாக சேர்ப்பு கொத்தமங்கலம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராமசபை கூட்டம்
1/21/2021 4:22:32 AM
புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட் டம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி அவைத் தலைவர் மூத்த முன்னோடி ராஜன் தலைமை வகித்தார். ஆலங்குடி எம்எல்ஏ எம்எல்ஏ மெய்யநாதன், ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொத்தமங்கலம் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ மெய்யநாதன் மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும் செய்திகள்
கோடை வெயிலில் இருந்து பறவைகளை காப்பாற்ற வீட்டு மாடியில் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்
விராலிமலை அருகே வாகனம் மோதி கொத்தனார் பலி
தென்னையை தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
அதிகாரிகள் எச்சரிக்கை திருமயம் அருகே லாரி- சுற்றுலா வேன் மோதல்: 13 பேர் காயம்
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
அறந்தாங்கி வட்டார வள மையத்தில் ஓவிய திருவிழா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா