8 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி கிராம மக்கள் கிடா வெட்டி கொண்டாட்டம்
1/21/2021 3:59:00 AM
சின்னசேலம், ஜன. 21: சின்னசேலம் ஏரி 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்து தண்ணீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் கிடா வெட்டி பூஜை செய்து கொண்டாடினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள பெரிய ஏரி, கோமுகி அணை கால்வாய் மற்றும் மயூரா நதியில் இருந்து வரும் நீரால் நிரம்புகிறது. இந்த ஏரியின் மூலம் சின்னசேலம் நகர பகுதி மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். பெத்தானூர், ஈசாந்தை உள்ளிட்ட 10 கிராம விவசாயிகளும் பயன் பெறுகின்றனர். நீர்வரத்து வாய்க்கால்களை சரிசெய்ய பொதுப்பணித்துறையும், வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகவே கடத்தூர், தெங்கியாநத்தம், தென்செட்டியந்தல் உள்ளிட்ட ஏரிகளுக்கு மட்டுமே நீர்வரத்து இருந்தது. சின்னசேலம் ஏரிக்கு வருவதற்குள் அணையில் நீர் வடிந்து விடும். காந்தி நகர், அண்ணா நகர் பகுதி மக்களுக்கு 40 நாளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைத்து வந்தது. மக்களின் நீண்ட நாள் போராட்டத்துக்கு பிறகு கடந்த ஆண்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அதிக நீர் ஏரிக்கு வந்தது. இதனால் நேற்று சின்னசேலம் ஏரி நிரம்பி வழிய துவங்கியது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு தலைமையில் கிராம மக்கள் கிடா வெட்டி பூஜை செய்தனர்.
மேலும் செய்திகள்
திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கழுத்தை அறுத்து கொன்று வீட்டின் தோட்டத்தில் புதைத்த கொடூரம்
விருத்தாசலம் பகுதியில் பைக்குகள் திருடிய 2 பேர் கைது
10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இறுதி ஒப்புதல் வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்த காலம் தலைவர்களுக்கு ராமதாஸ் நன்றி
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கூடுதல் டிஜிபி, கார் டிரைவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செங்கல்பட்டு எஸ்பி மீதும் வழக்கு
விருத்தாசலம் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்