ஆண் குழந்தை கடத்தல்?
1/21/2021 3:57:42 AM
விருத்தாசலம், ஜன. 21: பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இருவருக்கும் 4 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் இரணியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. தொடர்ந்து வீடு மற்றும் அருகிலுள்ள இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இதையடுத்து பெண்ணாடம் போலீசாருக்கு மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் வந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் குழந்தை விழுந்திருக்கலாம் என கருதி திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த திட்டக்குடி தீயணைப்பு துறையினர், வாய்க்கால் மற்றும் அங்கு உள்ள முட்புதர்களில் தேடினர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அப்பகுதியில் மர்ம நபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக வந்து சென்றது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மர்ம நபர்கள் யாரேனும் தூக்கி சென்று விட்டார்களா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தை காணா மல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
செஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
மருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி
கடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
கடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை
ஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்