கன்னட அமைப்பினர் சேதப்படுத்திய பெயர் பலகைகள் தமிழக எல்லைக்குள் நடும் பணி தீவிரம்
1/21/2021 3:44:01 AM
சத்தியமங்கலம்: தமிழக-கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் சேதப்படுத்திய பெயர் பலகைகளை மீண்டும் தமிழக எல்லைக்குள் நடும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் ராமாபுரம் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் கடந்த 10ம் தேதி நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பெயர் பலகைகளை கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இது சம்பந்தமாக தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி தாளவாடி மலைப்பகுதி பையனா புரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஒட்டரள்ளி செல்லும் சாலையில் இருமாநில எல்லையில் வைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான வரவேற்பு பெயர் பலகைகளை மீண்டும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை, நில அளவை துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய 3 துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு மாநில எல்லையில் நில அளவீடு செய்து எல்லை நிர்ணயம் செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரம் அருகே உள்ள இரு மாநில எல்லையில் நெடுஞ்சாலைத்துறையின் பெயர் பலகைகள் மீண்டும் தமிழக எல்லைக்குள் நடப்பட்டன. இதேபோல் பையனாபுரம் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சாலையில் பெயர் பலகை சேதப்படுத்தப்பட்ட பகுதியில் மீண்டும் தமிழக எல்லைக்குள் பெயர் பலகைகள் வைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கொரோனா விதிகளை மீறிய 32 வாகனங்கள் மீது நடவடிக்கை
அறுவடை முடியும் நிலையில் மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை விலை உயர்வு
பவானி அரசு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி இல்லை
மீன் மார்க்கெட்டு விடுமுறை எதிரொலி காய்கறி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
பேன்சி கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!