லேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்
1/21/2021 3:42:06 AM
திருவொற்றியூர்: எண்ணூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கவில்லை. இதனால் தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என பலமுறை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என கோரி நேற்று மதியம் பள்ளி நுழைவாயில் அருகே ஒன்று கூடினர். பின்னர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த எண்ணூர் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு
போக்சோவில் வாலிபர் கைது
தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி: 2 பேர் கைது
தாம்பரம் அருகே சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு
சொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை 2 ஆண்டுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது
வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, தங்கள் வசம் கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியர் கைது: உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வலை