கமுதி அருகே சேதமான பயிர்களை எம்எல்ஏ ஆய்வு
1/19/2021 4:04:07 AM
கமுதி, ஜன.19: கமுதி அருகே தொடர் மழையால் வீணாகிய நெற்பயிர்களை எம்எல்ஏ ஆய்வு செய்தார். கமுதி அருகே கீழக்கொடுமலூர் கிராமத்தில் சுமார் 800 ஏக்கருக்கு மேல் நெல்விவசாயம் செய்யப் பட்டுள்ளது. தற்போது பெய்த தொடர் மழையால் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் இப்பகுதி விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வயல்வெளிகளில் நடந்து சென்று மழையால் வீணாகிய நெற்பயிர்களை ஆய்வு செய்தார். பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கலெக்டரிடம் இப்பகுதியின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளதாக கூறினார். இதுபோல் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய சேதங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக கூறினார். ஆய்வின்போது கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் கோவிந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
பால விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
இன்று மின்தடை
ஆனந்தூரில் மதநல்லிணக்க கும்பாபிஷேக விழா நீர், மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
கமுதி அருகே கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு
மக்களின் சிரமத்தை போக்க தொண்டியை தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!