ராயக்கோட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
1/19/2021 3:46:51 AM
கிருஷ்ணகிரி, ஜன.19: கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை, பாலக்கோடு தொகுதி தூள்செட்டி ஏரியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றார். அவருக்கு ராயக்கோட்டை ரவுண்டானா அருகே, மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, ஓசூர் மாநகர செயலாளர் சத்யா எம்எல்ஏ ஆகியோரது தலைமையில் வான வேடிக்கை, மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் திறந்து வேனில் நின்று பேசுகையில், இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளது. காத்திருங்கள். நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என கேள்வி எழுப்பினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாநில நிர்வாகி விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், ரகுநாத், நாகேஷ், வெங்கடேஷ், தளி ஒன்றிய தலைவர் சீனிவாசரெட்டி, ஓசூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷேக்ரஷீத், நிர்வாகிகள் எல்லோராமணி, சின்னராஜ், சாந்தி அரியப்பன், அரியப்பன், திவாகர், வெங்கடேஷ், பாக்கியராஜ், சாலம்மாள், முனிரத்தினம்மா, சுனந்தா, நகர செயலாளர் நாகராஜ், முனிரத்தினம், சதாசிவம், கருணாகரன், சித்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
மண்டல அளவிலான தபால்துறை குறைதீர் நாள் கூட்டம்
வியாபாரியிடம் ₹1.90 லட்சம்
மகளுடன் இளம்பெண் கடத்தல்
ஓசூரில் வாலிபர் எரித்து கொலை மாயமானோர் பட்டியல் எடுத்து தீவிர விசாரணை
முருகன் கோயிலில் கிராம மக்கள் பூஜை
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!