கிருஷ்ணகிரி, ஓசூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
1/19/2021 3:46:24 AM
ஓசூர், ஜன.19: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஓசூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவையொட்டி, ராம்நகரில் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராயக்கோட்டை சாலையில், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு 104 கிலோ கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர், எம்ஜிஆர் உருவப்படம் பல்லக்கில் வைத்து, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில், சந்திரன், ஜெயபிரகாஷ், கந்தப்பா, ராமு, சென்னகேசவன், நாராயணன், நாராயணன், அசோக்ரெட்டி, சிவகுமார், முருகன், சக்கரவர்த்தி, அரப்ஜான், முஜிபுர் ரஹமான், பாலுசாமி, மாதேஷ், கேசவன், பக்ஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், கிட்டம்பட்டியில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கன்னியப்பன், ஜெயா ஆஜி, கோபி, ரமேஷ், காத்தவராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெத்ததாளாப்பள்ளியில், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், அம்சா ராஜன், முனிவெங்கட்டப்பன், பால்ராஜ், வேலன் உள்ளிட்டோர், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் நடந்த நிகழ்ச்சியில் கேசவன், காத்தவராயன், கன்னியப்பன், தங்கமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். ...
மேலும் செய்திகள்
பெத்ததாளாப்பள்ளியில் மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா
சூளகிரி அருகே வைக்கோல் ஏற்றி சென்ற டெம்போ தீப்பிடித்து எரிந்தது
காரில் எடுத்துச் சென்ற ₹1.50 லட்சம் பறிமுதல்
சூளகிரி தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை
மாவட்டத்தில் 60 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி
விலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி