கலெக்டர் அழைப்பு கரூர் மாவட்டத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு 208 பள்ளிகள் இன்று திறப்பு
1/19/2021 3:24:18 AM
கரூர், ஜன. 19: 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஜனவரி 19ம்தேதி முதல் செயல்படும் என அரசு அறிவித்துள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் பள்ளிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. கொரனோ பரவலை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 24ம்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுதும் கொரனோ பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதனடிப்படையில், ஜனவரி 19ம்தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் செயல்படும் எனவும், மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பள்ளிக்கு வரலாம் எனவும் அரசு அறிவித்தது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இன்று முதல் செயல்படவுள்ளதால் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் உட்காரும் வகையில் தேவையான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு, மாணவர்களை வரவேற்கும் வகையில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எத்தனை பேர் வருகை?
இன்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் துவங்கவுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 208 பள்ளிகளில், 25ஆயிரத்து 88 மாணவ, மாணவிகள் பயிலும் நிலையில், மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பள்ளிக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளதால் இதில் எத்தனை மாணவர்கள் முதற்கட்டமாக வருகை தருவார்கள் என்பது இன்று தெரியும் என கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
மக்கள் வரத்து குறைவு
கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது
கரூர், ஜன. 19: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த மழையும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மக்களின் வரத்து மிகவும் குறைவாகவேஇருந்தது. கடந்த வாரமும் இதே நிலைதான் அலுவலக வளாகத்தில் நிலவிய நிலையில், எந்தவித மாற்றமும் இன்றி நேற்றும் கலெக்டர் அலுவலகம் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.அடுத்து வரும் வாரங்களில் வழக்கம் போல மக்கள் வரத்து அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அரவக்குறிச்சி பகுதி பஸ்நிறுத்தங்களில் கோடைகோல நிழல்பந்தல் அமைக்க கோரிக்கை
கணவரால் கைவிடப்பட்ட, விதவை பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்
கருத்தரங்கில் ஆலோசனை தோகைமலையில் மதுபானம் பதுக்கி விற்ற 3 பேர் கைது
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையால் ராயனூர் பகுதி மக்கள் அவதி
குளித்தலையில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு பேரணி
அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 17 துப்பாக்கி ஒப்படைப்பு
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!