கரூர் தெற்கு காந்தி கிராமம் சாலை பள்ளத்தில் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
1/19/2021 3:24:03 AM
கரூர், ஜன. 19: கரூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் ஐயப்பன் கோயில் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு தெருக்களுக்கு இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், தொடர்மழையின் காரணமாக ஐயப்பன் கோயில் அருகே பள்ளம் ஏற்பட்டு, பள்ளத்தில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இதனை கடந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்களின் நலன் கருதி இந்த பள்ளத்தை சரி செய்ய தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
2 பேர் காயம் கொண்டை கடலை பறிக்கும் பணியில் பெண்கள் புதுப்பிக்க மக்கள் கோரிக்கை விசி நிர்வாக குழு கூட்டம்
கலெக்டர் அறிவுறுத்தல் சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து
சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்
நடவடிக்கை எடுக்க கோரிக்கை தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்
பேருந்து நிலையம் பின்புறம் சந்துப்பகுதியில் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் எதிரே இடிந்து விழும் அபாய நிலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த தென்கரை வாய்க்கால் பாலம்