கோயில் பூசாரி தற்கொலை
1/17/2021 1:44:58 AM
பல்லாவரம்: பல்லாவரம், மலகானந்தபுரம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). இவர் அப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயில் பூசாரி. இவருக்கு, பல இடங்களில் பெண் தேடியும் பொருத்தமான வரன் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் படுக்கையறையில் வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பல்லாவரம் போலீசார் விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்து காதல் சின்னத்திரை நடிகையிடம் தகராறு உதவி இயக்குனருக்கு அடி உதை: போலீஸ் விசாரணை
வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி
மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம்
மதுசூதனன் மனைவி கொரோனாவுக்கு பலி
கள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய பிரபல டாட்டூ கலைஞர்: கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்; 15 சவரன், செல்ேபான்கள் பறிமுதல்
இரும்பு ராடால் அடித்து வீட்டு உரிமையாளர் படுகொலை: கொடுங்கையூரில் பயங்கரம்