திடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா
1/13/2021 7:14:19 AM
இளையான்குடி, ஜன.13: இளையான்குடி அருகே அமைச்சர் பங்கேற்ற விழாவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சர் அதிருப்தியடைந்தார்.
இளையான்குடி அருகே விசவனூரில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். விழாவில் ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மைக் எடுக்கவில்லை. ஒரு வழியாக பொன்.மணிபாஸ்கரன் பேசி முடித்தார். இதன்பிறகு பேச வேண்டிய அமைச்சர், மின்சாரத்திற்காக காத்திருந்தார்.
அங்கிருந்த அதிகாரிகளும் உடனே மின்சாரம் வந்துவிடும் என்றனர். ஆனால் 10 நிமிடங்கள் காத்திருந்தும் மின்சாரம் வரவில்லை. எனவே வேறு வழியின்றி அமைச்சர் பேச தொடங்கினார். அப்போது போதிய வெளிச்சல் இல்லாததால், விழா நோட்டீஸில் இருந்த நிர்வாகிகள் பெயர் தெரியவில்லை. எனவே அருகில் இருந்தவர்கள் செல்போனில் டார்ச் அடிக்க, அந்த வெளிச்சத்தில் அமைச்சர் நோட்டீசை பார்த்து நிர்வாகிகள் பெயரை வாசித்தார். பின்னர் சுமார் 20 நிமிடம் பேசினார். அவர் பேசி முடிக்கும் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விழாவில் பங்கேற்ற பலருக்கும் அமைச்சர் பேசியது கேட்கவில்லை. கூட்டத்தில் ஒரே சலசலப்பு நிலவியது. இதனால் விழா முடிந்தவுடன் அமைச்சர் அதிருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மேலும் செய்திகள்
இன்று மின்தடை
கொரோனா தடுப்பு பிரிவு ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மனு
சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அடிக்கடி பழுதாகும் மின்வாரிய சர்வர் ஆன்லைனில் பணம் கட்ட முடியாமல் தவிப்பு
காளையார்கோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மானாமதுரையில் பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்