பூவந்தியில் 9 ஆண்டுக்குபின் நெல் விவசாயம் கண்மாய் நீரை நம்பி களமிறங்கும் விவசாயிகள்
1/13/2021 7:13:04 AM
திருப்புவனம், ஜன.13: திருப்புவனம் அருகே பூவந்தியில் 9 ஆண்டுகளுக்குப்பின் கண்மாய் தண்ணீரை நம்பி நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த பூவந்தி கண்மாயை நம்பி 800 ஏக்கர் பாசனப் பரப்புகள் உள்ளன. கடந்த 9 ஆண்டாக கண்மாய்க்கு போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயப்பணிகள் நடைபெறவில்லை. தற்போது தொடர் மழையால் கண்மாய்க்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 9 ஆண்டாக தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் விளைநிலமாக மாற தொடங்கியுள்ளன.
இதுகுறித்து பூவந்தி விவசாயிகள் கூறுகையில், தொடர் மழையால் கண்மாயில் தண்ணீர் சேகரமாகி வருகிறது. இதனை நம்பி விவசாய பணிகளை தொடங்கியுள்ளோம். கடந்த 9 ஆண்டுக்குப்பின் நெல் நடவு செய்கிறோம். 800 ஏக்கர் பாசனப்பரப்பில் தற்போது 150 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி செய்துள்ளோம். கண்மாயில் உள்ள தண்ணீர் 2 மாதத்திற்குதான் பயன்படும். அதற்குப்பின்னர் தண்ணீரின்றி நெல்லை காப்பாற்றுவது கடினம். தற்போது வைகை அணையில் தண்ணீர் இருப்பு உள்ளது. சிவகங்கை மாவட்ட வைகைப்பாசன விவசாயிகள் தமிழக முதல்வரை கடந்த வாரம் சந்தித்து வைகையில் இருந்து கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியுள்ளோம். தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம்தான் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் செய்திகள்
இன்று மின்தடை
கொரோனா தடுப்பு பிரிவு ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மனு
சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அடிக்கடி பழுதாகும் மின்வாரிய சர்வர் ஆன்லைனில் பணம் கட்ட முடியாமல் தவிப்பு
காளையார்கோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மானாமதுரையில் பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்