வில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா
1/13/2021 6:50:45 AM
வாடிப்பட்டி, ஜன.13: மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியில் திமுக சார்பில் 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்டமான சமத்துவப் பொங்கல் விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வருகிறார். மதுரை வரும் அவர் நாளை காலை அவனியாபுரம் பெரியார் சிலை அருகே திமுக கொடியேற்றுகிறார். தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இதற்காக வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் பிரத்யேகமாக கிராமங்களில் உள்ளது போன்று பல்வேறு குடிசை வீடுகள், மாட்டுத் தொழுவம், கிராமத்து கோவில் உள்ளிட்டவை சிறந்த கலைஞர்கள் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. சமத்துவ பொங்கல் விழாவினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறார். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு தங்கக் காசுகளை பரிசாக வழங்குகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்முத்து ராமலிங்கம், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாணவிகள் மாயம்
எழுமலை இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு
மறைந்த முன்னாள் எம்பி அக்கினிராசு உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
விசாரணைக்கு ஆஜராகாத போலீசாருக்கு பிடிவாரண்ட்
கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கோரி கொம்பாடி கிராமமக்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகை
டூவீலரில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 11 பவுன் பறிப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்