போலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்
1/13/2021 6:27:30 AM
கோவை, ஜன.13: கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் கோவை சைபர் கிரைம் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியதாவது: என் பெயர் மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பெயரில் பேஸ்புக் பக்கம் இருக்கிறது. இதில் கட்சி மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை பதிவு செய்து வருகிறேன். சமீப காலமாக எனது பெயரில் என் போட்டோ வைத்து போலி பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் தேவையற்ற நிகழ்வுகளை சிலர் பதிவு செய்து வருகின்றனர். எனது பெயரை சொல்லி பல்வேறு தரப்பினரிடம் சிலர் பணம் பறித்து வருவதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது. நான் எதற்காகவும் யாரிடமும் நிதியாகவோ, அன்பளிப்பாகவோ பணம் பெறவில்லை. என் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் உருவாக்கி அதன் மூலமாக மெசேஜ் அனுப்பி பணம் பெறும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் வட்டாரத்தில் என் பெயரை கெடுக்கும் வகையில் போலியான பதிவுகளை வெளியிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் எனது நண்பர்கள் மற்றும் என் சம்மதம் பெற்ற நபர்கள் மட்டுமே உள்ளனர். என் போட்டோவை வைத்து போலி பேஸ்புக் பக்கத்தை வடிவமைத்து அரசியல் ரீதியாக ஆதாயம் தேட நினைக்கும் நபர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். என் பெயரில் யாராவது பணம் கேட்டால் யாரும் தர வேண்டாம். பணம் கேட்கும் கும்பல் குறித்து போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்
6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு
476 கிலோ குட்கா பறிமுதல்
போலீஸ் தடையை மீறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அரிய வகை மஞ்சள்கோடு வரியன் பாம்பு மீட்பு
டெங்கு தடுப்பு பணி மாநகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்